எந்த பெட்ரோல் பங்கிலும் மீனவர்கள் டீசல் பெறலாம் அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
மீனவர்கள் எந்த பெட்ரோல் பங்கிலும் மானிய விலையில் டீசல் பெற்றுக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்து வருவதாக அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்தார்.
பாகூர்
மீனவர்கள் எந்த பெட்ரோல் பங்கிலும் மானிய விலையில் டீசல் பெற்றுக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்து வருவதாக அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்தார்.
அமைச்சர் ஆய்வு
பாகூர் தொகுதிக்குட்பட்ட மூ.புதுக்குப்பம் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பபொதுப்பணித்துறை மூலமாக சிறிய அளவிலான மீன்பிடி படகு தளம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
விளை நிலங்கள் பாதிக்கப்படும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் தடை செய்யப்பட்டு இருந்த நிலையில் இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரி அப்பகுதி மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் புதுக்குப்பம் மீனவ பஞ்சாயத்தார், அங்கு அமைக்கப்பட்டிருந்த மீன் பிடி படகு இறக்கு தளத்தை கடந்த மாதம் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
இந்த மீன்பிடி படகு தளத்தை அமைச்சர் லட்சுமி நாராயணன், செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது, செந்தில்குமார் எம்.எல்.ஏ., மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மீன்பிடி படகு தளம் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். இப்பகுதியில் உள்ள மாங்குரோவ் வனப்பகுதி உள்ளதால் சுற்றுலா திட்டத்தையும் செயல்படுத்தலாம் என்றார்.
மானிய டீசல்
அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசுகையில், இது தொடர்பாக புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி சுற்றுலா திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். மீனவர்கள் டீசல் மானியம் பெறுவதற்கான புதிய ஏற்பாடாக புத்தகமாக தயாரித்து வழங்கப்படும். அதனை காட்டி எந்த பெட்ரோல் நிலையத்திலும் மானிய விலையில் டீசல் வாங்கி கொள்ளலாம் என்றார்.
Related Tags :
Next Story