பிபின் ராவத் மறைவு: அரை கம்பத்தில் தேசிய கொடி
பிபின் ராவத் மறைவையொட்டி சென்னை தலைமைச்செயலகம் அருகே உள்ள போர் நினைவு சின்னத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
சென்னை,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உலக நாடுகளின் தலைவர்கள், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்,
இந்நிலையில் பிபின் ராவத உள்ளிட்ட ராணுவ அதிகாரிகளின் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக சென்னை தலைமைச்செயலகம் அருகே உள்ள போர் நினைவு சின்னத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
Related Tags :
Next Story