டோனி தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரிய மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு
போலீஸ் அதிகாரியிடம் ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு டோனி தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரிய மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,
ஐ.பி.எல்., சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய தமிழக முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி மீதும் குற்றம் சாட்டியிருந்தார்.
இதுகுறித்து, தனியார் தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சியில், அதுகுறித்து பேசினார். இதையடுத்து தனது பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளதாகக்கூறி ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு தனியார் தொலைக்காட்சி நிர்வாகம், ஐ.பி.எஸ்., அதிகாரி சம்பத்குமார் ஆகியோருக்கு எதிராக டோனி கடந்த 2014-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
டோனியின் இந்த வழக்கை நிராகரிக்கக்கோரி போலீஸ் அதிகாரியான சம்பத் குமார் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சேஷசாயி, “டோனி தொடர்ந்த வழக்கில் தற்போது சாட்சி விசாரணை தொடங்கியுள்ளது. இப்போது, சம்பத்குமாரின் மனுவை ஏற்றுக் கொண்டால் பிரதான வழக்கு முடிவுக்கு வர இன்னும் பல ஆண்டுகள் தாமதமாகும். எனவே, சம்பத் குமார் மனுவை தள்ளுபடி செய்கிறேன். சாட்சி விசாரணையை அவர் எதிர்கொள்ள வேண்டும்” என்று உத்தரவிட்டார். டோனி தொடர்ந்துள்ள வழக்கு விசாரணையை வருகிற 15-ந்தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

Related Tags :
Next Story