குண்டர் சட்டத்தில் கைதான பா.ஜ.க. நிர்வாகியை கடலூரில் இருந்து புழல் சிறைக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி
குண்டர் சட்டத்தில் கைதான பா.ஜ.க. நிர்வாகியை கடலூரில் இருந்து புழல் சிறைக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,
மத ரீதியான சர்ச்சை கருத்துகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக பா.ஜ.க. நிர்வாகி கல்யாணராமன் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஓர் ஆண்டு சிறையில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் கடந்த அக்டோபர் மாதம் உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கல்யாணராமன் சார்பில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கல்யாணராமன் நிர்வாக காரணத்துக்காக கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்தநிலையில் கல்யாணராமனின் மனைவி சாந்தி, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், “கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்ட தனது கணவரை காரணமே இல்லாமல் கடலூர் சிறையில் அடைத்துள்ளனர். கண்ணுக்கு உரிய சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. எனவே, அவரை சென்னைக்கு மாற்றவும், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற அனுமதிக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கல்யாணராமனுக்கு தேவையான் சிகிச்சை சிறையில் அளிக்கப்படுவதாகவும், அவரை சிறை மாற்றம் செய்ய தேவையில்லை என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Tags :
Next Story