சென்னை, திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் தனியார் மயமாகின்றன - மத்திய மந்திரி தகவல்


சென்னை, திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் தனியார் மயமாகின்றன - மத்திய மந்திரி தகவல்
x
தினத்தந்தி 10 Dec 2021 4:55 AM IST (Updated: 10 Dec 2021 4:55 AM IST)
t-max-icont-min-icon

சென்னை, திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் தனியார் மயமாகின்றன என்று நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல் தெரிவித்தார்.

சென்னை, 

மத்திய அரசும், இந்திய விமான நிலையங்கள் ஆணையமும் நாட்டில் உள்ள விமான நிலையங்களை தனியார் வசம் ஒப்படைத்திட திட்டமிட்டுள்ளதா? அப்படியானால் அதன் விவரங்கள் என்ன? தமிழ்நாட்டில் உள்ள பன்னாட்டு விமான நிலையம் எதையாவது தனியாரிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதா? தனியார் வசம் ஒப்படைக்கும்போது பரந்து விரிந்துள்ள விமான நிலையங்களின் நிலம் உட்பட சொத்துக்கள் முழுவதும் தனியாருக்கு தரப்படுமா? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை விமானப் போக்குவரத்துத் துறை மந்திரியிடம், தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு எழுப்பி இருந்தார்.

இதற்கு, பதில் அளித்த மத்திய விமானத்துறை இணை மந்திரி வி.கே.சிங் கூறியதவாது:-

2022-ம் ஆண்டு தொடங்கி 2025-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நாட்டில் உள்ள 25 விமான நிலையங்கள் திறம்பட இயக்கிடவும் சிறப்பான மேலாண்மைக்காகவும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. அரசு -தனியார் பங்கேற்பு திட்டத்தின் அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ள 25 விமான நிலையங்களில் தமிழகத்தில் உள்ள திருச்சி, மதுரை, கோவை மற்றும் சென்னை விமான நிலையங்களும் அடங்கும்.

Next Story