காலங்கடந்த விசாரணை; சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் அமைச்சர் மனு


காலங்கடந்த விசாரணை; சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் அமைச்சர் மனு
x
தினத்தந்தி 10 Dec 2021 5:06 AM IST (Updated: 10 Dec 2021 5:06 AM IST)
t-max-icont-min-icon

அளவுக்கு மீறி சொத்து சேர்த்ததாக தொடர்ந்த வழக்கை 4 ஆண்டுகள் கழித்து ஐகோர்ட்டு விசாரிப்பது தவறு என சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் அமைச்சர் மனு தாக்கல் செய்துள்ளார்.




சென்னை,

தமிழக முன்னாள் பால் வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, கடந்த 2011ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை ரூ.7 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது.  இதனால், தற்போது சென்னை ஐகோர்ட்டு நீதிபதி நிர்மல்குமார் அமர்வில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில் ஐகோர்ட்டு விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்றாமல் விசாரணை நடத்தி வருகிறது என்றும், இது காலம் கடந்த குற்றச்சாட்டு என்பதால் அதில் முகாந்திரம் இல்லை என்றும் ஐகோர்ட்டு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் ராஜேந்திர பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆகஸ்டு 19ந்தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது. அவரது கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரிக்கலாம். ஆனால் உத்தரவு பிறப்பிக்க கூடாது என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மேற்கண்ட விவகாரம் தொடர்பாக ராஜேந்திர பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மாறுபட்ட நிலைப்பாட்டை அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக விசாரித்து முடித்த வழக்கை நான்கு ஆண்டுகள் கழித்து சென்னை ஐகோர்ட்டு தானாக முன்வந்து மீண்டும் விசாரித்தது என்பது முற்றிலும் தவறாகும். அதனால் தன் மீதான வழக்கு விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story