தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்


தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 10 Dec 2021 9:23 AM IST (Updated: 10 Dec 2021 9:23 AM IST)
t-max-icont-min-icon

தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக, இன்று (வெள்ளிக்கிழமை) தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட உள் மாவட்டங்களில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவும் என்று கூறப்பட்டுள்ளது.

நாளை (சனிக்கிழமை) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், நாளை மறுதினமும் (ஞாயிற்றுக்கிழமை), 13-ந் தேதியும் (திங்கட்கிழமை) தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் மிதமான மழையும், வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story