பஸ்சில் இருந்து இறக்கிவிட்ட சம்பவம்: மக்கள் நீதி மய்யம் கண்டனம்


பஸ்சில் இருந்து இறக்கிவிட்ட சம்பவம்: மக்கள் நீதி மய்யம் கண்டனம்
x
தினத்தந்தி 11 Dec 2021 12:18 AM IST (Updated: 11 Dec 2021 12:18 AM IST)
t-max-icont-min-icon

பஸ்சில் இருந்து இறக்கிவிட்ட சம்பவம்: மக்கள் நீதி மய்யம் கண்டனம்.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசு பஸ்சில் இருந்து மீன் விற்கும் மூதாட்டி வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்ட சம்பவத்தால் தமிழகமே கொதித்துக் கிடக்கிறது. இந்த நிலையில் குறவர் இனத்தைச்சேர்ந்த ஒரு ஏழைக்குடும்பம் பஸ்சில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விடப்பட்டு, உடைமைகளும் சாலையில் வீசப்பட்டுள்ளன.

ஏழைகள் என்றால் கிள்ளுக்கீரையா? கேட்க நாதி இல்லை எனும் எண்ணமா? மக்களிடம் மரியாதை காட்டாத ஊழியர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இதுபோன்ற அவமதிப்புகள் இனியும் நிகழாமல் இருப்பதை போக்குவரத்துத்துறை அமைச்சர் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story