கொரோனா பேரிடர் முடிவுக்கு வர தடுப்பூசி தான் தீர்வு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


கொரோனா பேரிடர் முடிவுக்கு வர தடுப்பூசி தான் தீர்வு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x

தொடர்ந்து கொண்டிருக்கும் கொரோனா பேரிடர் முடிவுக்கு வர தடுப்பூசி தான் தீர்வு என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் 1600 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. சென்னை தியாகராயர் நகரில் சிறப்பு தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த பிறகு   மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சென்னையில் 1600 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. மக்கள், தயக்கம் காட்டாமல் முகாம்களுக்கு வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.  தொடர்ந்து கொண்டிருக்கும் கொரோனா பேரிடர் முடிவுக்கு வர தடுப்பூசி தான் தீர்வு என்றார். 

Next Story