காவல்துறை ஒரு ஏவல் துறை: சைக்கிளில் செல்லவும் செல்பி எடுப்பதற்குமா டிஜிபி - அண்ணாமலை கேள்வி
தமிழகத்தில் கருத்துச் சுதந்திரத்திற்கு இடமில்லாமல் போய்விட்டது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை,
மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்த நாள் விழா, சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
இதில் கலந்து கொண்ட தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பாரதியாரின் திருவுருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
தமிழக காவல்துறை மிக மோசமாக செயல்படும் காவல்துறையாக ஆக உள்ளது. காவல்துறை ஒரு கட்சியை சார்ந்த ஏவல் துறையாக உள்ளது.
சைக்கிளில் செல்லவும் செல்பி எடுப்பதற்குமா டிஜிபி; நேர்மையான டிஜிபியாக இருந்தால் பிபின் ராவத் உயிரிழப்பு குறித்து தவறான கருத்து கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்; கட்சி பொறுமையாக இருக்கிறது, பொறுமையும் ஒரு அளவுக்குத்தான், பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.
தமிழகத்தில் கருத்துச் சுதந்திரத்திற்கு இடமில்லாமல் போய்விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story