சண்டையில கிழியாத சட்ட எங்கிருக்கு: கணவன் - மனைவி சண்டையை விசாரிக்க சென்ற போலீஸ் சட்டை கிழிப்பு


சண்டையில கிழியாத சட்ட எங்கிருக்கு: கணவன் - மனைவி சண்டையை விசாரிக்க சென்ற போலீஸ் சட்டை கிழிப்பு
x
தினத்தந்தி 11 Dec 2021 4:05 PM IST (Updated: 11 Dec 2021 4:05 PM IST)
t-max-icont-min-icon

குடிபோதையில் இருந்த கார்த்திக், தேவராஜை கையால் தாக்கி, அவரது சட்டையை இழுத்து பிடித்து கிழித்தது மட்டுமல்லாமல் கீழே தள்ளி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார்.

பூந்தமல்லி, 

திருவேற்காடு, செல்லியம்மன் நகரை சேர்ந்தவர் தேவி(வயது28), தனது கணவர் கார்த்திக் மதுபோதையில் தன்னை அடிப்பதாக நேற்று  இரவு திருவேற்காடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார். இந்த குடும்ப சண்டையை விசாரிக்க சென்ற திருவேற்காடு போலீஸ் நிலைய தலைமை காவலர் தேவராஜ்(வயது 44), என்பவர் தேவியின் வீட்டுக்கு சென்றுள்ளார். 

அப்போது அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்த தேவியின் கணவர் கார்த்திக்கை போலீஸ்காரர் தேவராஜ் மடக்கிய போது குடிபோதையில் இருந்த கார்த்திக், தேவராஜை கையால் தாக்கி, அவரது சட்டையை இழுத்து பிடித்து கிழித்தது மட்டுமல்லாமல் கீழே தள்ளி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார்.  

இதையடுத்து குடி போதையில் இருந்த கார்த்திக்கை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story