ஆட்டோ டிரைவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது


ஆட்டோ டிரைவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 11 Dec 2021 10:09 PM IST (Updated: 11 Dec 2021 10:11 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவி கடத்தியதாக ஆட்டோ டிரைவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.

பள்ளி மாணவியை கடத்தியதாக ஆட்டோ டிரைவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.
மாணவி கடத்தல்
புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 
இந்த நிலையில் அந்த சிறுமி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அந்த சிறுமியை குழந்தைகள் நலக்குழுவிடம் போலீசார் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்திய போது கோவிந்தசாலை பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பரத் (வயது 34) என்பவர் அந்த சிறுமியை கடத்தி சென்று 3 நாட்கள் ஒரு இடத்தில் தங்க வைத்திருந்து திருப்பி அனுப்பியது தெரியவந்தது.
போக்சோ வழக்கு
இதனை தொடர்ந்து அந்த ஆட்டோ டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தைகள் நலக்குழு சார்பில் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சிறுமி கடத்தல் வழக்கை, போக்சா வழக்காக மாற்றி ஆட்டோ டிரைவர் பரத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.
--


Next Story