மத்திய அரசு அறிவுறுத்தினால் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
மத்திய அரசு அறிவுறுத்தினால் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தயாராக இருக்கிறோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
கோவிலில் சாமி தரிசனம்
தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அமைச்சர்கள் அனைவரும் அவரவர் துறைகளில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். முதல்-அமைச்சர் முகஸ்டாலின் மாதந்தோறும் மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மாணவர்களுக்கு தடுப்பூசி
அதன்படி, ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் எடுக்கும் முடிவுகளின்படி தமிழக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளது. உலக சுகாதார மையம், மத்திய அரசு அறிவுறுத்தினால் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தயாராக உள்ளோம். தமிழகத்தில் பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள் குறித்து மாவட்டம் வாரியாக கணக்கெடுப்பு நடத்தி வருகிறோம். அதன் அறிக்கை கிடைத்ததும் தேவையான நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலிலும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சாமி தரிசனம் செய்தார்.
Related Tags :
Next Story