மதுரையில் பூக்களின் விலை கடும் உயர்வு
மதுரை, மாட்டுதாவனி மலர் சந்தையில் மல்லிகை பூவின் விலை உயர்ந்து கிலோ 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது
மதுரை,
தொடர் மழை காரணமாகவும், மலர் வரத்துக் குறைவு காரணமாகவும் மல்லிகைப் பூவின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூவின் விலை உயர்ந்து கிலோ 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மல்லிகை பூக்கள் வரத்து குறைந்து தேவை அதிகரித்ததால் வரலாறு காணாத விலை உயர்வு என வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மல்லிகை பூ மட்டுமின்றி பிற பூக்களும் விலை உயர்ந்துள்ளது. முல்லை பூ, இன்று கிலோ 1,500 ரூபாய்க்கும், கனகாம்பரம் பூ-2,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதைபோல பிச்சிப்பூ, 1,200 ரூபாய்க்கும், அரளி பூ-400 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் ரூ.300-க்கும், செவ்வந்தி, சம்பங்கி ரூ.250-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நாளை முகூர்த்த நாள் என்பதால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story