3 திருமணம் செய்தும் குழந்தை இல்லை: 4-வதாக சிறுமியை திருமணம் செய்த அரசு பஸ் ஓட்டுநர் கைது


3 திருமணம் செய்தும் குழந்தை இல்லை: 4-வதாக சிறுமியை திருமணம் செய்த அரசு பஸ் ஓட்டுநர் கைது
x
தினத்தந்தி 12 Dec 2021 11:57 AM IST (Updated: 12 Dec 2021 11:57 AM IST)
t-max-icont-min-icon

குழந்தை இல்லை என்பதற்காக 3 திருமணத்திற்கு பின்பு நான்காவதாக சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய அரசு பஸ் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பஸ்  ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் என்பவருக்கு ஏற்கனவே மூன்று திருமணங்கள் ஆன நிலையில் குழந்தை இல்லை என்பதற்காக நான்காவதாக சிறுமியை திருமணம் செய்து கொண்டுள்ளார். 

நான்காவதாக சிறுமியை திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர் கர்ப்பமாகியுள்ளார். இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அரசு பஸ் ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் மற்றும் 13 வயது சிறுமியைத் திருமணம் செய்து வைத்த அவருடைய தாயார் பரமேஸ்வரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3 திருமணமாகியும் குழந்தையில்லை என்பதற்காக சிறுமியை ராதாகிருஷ்ணன் 4-வது திருமணம் செய்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Next Story