கவர்னர் ஆர்.என்.ரவி உடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு


கவர்னர் ஆர்.என்.ரவி உடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திப்பு
x
தினத்தந்தி 12 Dec 2021 12:08 PM IST (Updated: 12 Dec 2021 12:08 PM IST)
t-max-icont-min-icon

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்தார்.

சென்னை,

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, தமிழக போலீசார் டிஜிபி கட்டுப்பாட்டிலேயே இல்லை. சைக்கிளில் செல்வதற்கும் செல்பி எடுப்பதற்கும் தான் தமிழக டிஜிபி உள்ளார் என தெரிவித்தார்.

அதே நேரத்தில் தி.மு.க-வை விமர்சித்தால் மட்டும் கைது? இது தான் தமிழ்நாட்டின் தற்போதைய அவல நிலை என தெரிவித்தார். தமிழகத்தில் மாரிதாஸ் கைது விவகாரம் பாஜகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,  கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கவர்னர்  ஆர்.என்.ரவியை தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்தார்.   இந்த சந்திப்பின் போது திமுக அரசு குறித்து புகார் மனு அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story