அன்பு சகோதரர் ரஜினிகாந்த்திற்கு பிறந்த நாள் வாழ்த்து - சசிகலா...!


அன்பு சகோதரர் ரஜினிகாந்த்திற்கு பிறந்த நாள் வாழ்த்து - சசிகலா...!
x
தினத்தந்தி 12 Dec 2021 1:48 PM IST (Updated: 12 Dec 2021 1:48 PM IST)
t-max-icont-min-icon

இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன் என நடிகர் ரஜிகாந்திற்கு சசிகலா பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் 71 வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ரஜினி வீடு முன்பு குவிந்த ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் அன்னதானம் நடக்கிறது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் மம்முட்டி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் திரையுலகினர் என பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் சமூகவலைத்தளமான டுவிட்டரில் மூலமும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்  வி.கே.சசிகலா நடிகர் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். 

அதில், அன்பு சகோதரர் ரஜினிகாந்த் அவர்களுக்கு, என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

தங்களது அன்பும், நட்பும், சகோதரபாசமும் என்றென்றும் நிலைத்திருக்க எந்நாளும் இறைவனின் அருள் கிடைக்கப்பெற வேண்டும். நீண்ட ஆயுளோடும் நல்ல சுகத்தோடும் என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.

Next Story