தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் வாயில் கறுப்புத் துணி கட்டி போராட்டம்


தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க.வினர் வாயில் கறுப்புத் துணி கட்டி போராட்டம்
x
தினத்தந்தி 12 Dec 2021 4:58 PM IST (Updated: 12 Dec 2021 4:58 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. அரசு கருத்து சுதந்திரத்தை பறிப்பதாகக் கூறி பா.ஜ.க.வினர் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில், தி.மு.க. அரசு மற்றும் காவல்துறையை கண்டித்து வாயில் கருப்புத் துணி கட்டி பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எம்.எல்.ஏ. சரஸ்வதி, வி.பி.துரைசாமி உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் ஆகியோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். 

பா.ஜ.க. ஆதரவாளர்கள் 18 பேர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை தி.மு.க. அரசு கைவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். 

போராட்டத்தின் போது தி.மு.க. அரசு கருத்து சுதந்திரத்திற்கு எதிராக செயல்படுவதாக கண்டனம் தெரிவிக்கும் வகையில் பதாகைகளை வைத்திருந்தனர். மேலும் இது முதல் கட்ட போராட்டம் தான் என்றும் மாநிலத் தலைவரின் ஆலோசனையோடு அடுத்த கட்ட போராட்டம் மிகத்தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்றும் பா.ஜ.க. மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு மாநில தலைவர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

Next Story