சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை
சென்னையில் எழும்பூர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னை ,
வடகிழக்கு பருவமழை காலமான தற்போது தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில்,நவம்பர் மாத இறுதியில் பெய்த கனமழைக்கு பிறகு இந்த மாதம் வடதமிழகத்தில் சற்று மழை குறைந்து வெயில் காணப்பட்டது. கடந்த வாரம் முதல் சென்னையில் அவ்வப் போது சாரல் மழை பெய்து வந்தது.
இந்த நிலையில் தற்போது சென்னையில் மெரினா, மயிலாப்பூர் , ராயப்பேட்டை, தேனாம்பேட்டை,கோடம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல் ,பம்மல் தி நகர் , எழும்பூர் , நுங்கம்பாக்கம் , ஆழ்வார்பேட்டை , ஆலந்தூர் , கிண்டி , பரங்கிமலை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
நேற்று இரவு சென்னையில் ஆங்காகே மிதமான மழை பெய்தது. அதை தொடர்ந்து இன்று பகலில் வெயில் காணப்பட்ட நிலையில் தற்போது பல இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
Related Tags :
Next Story