குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு: நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 12 Dec 2021 4:31 PM GMT (Updated: 2021-12-12T22:01:27+05:30)

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக சமூகவலைதளத்தில் தவறான தகவல் பரப்பியதாக நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விராலிமலை, 

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி அடுத் த நஞ்சப்பசத்திரம் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத்தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அவர்களின் மறைவுக்கு மொத்த இந்தியாவே துக்கம் அனுசரித்தது. நாடு முழுக்க மக்கள் பலர் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தினர். இதனிடையே சிலர் பிபின் ராவத் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று இந்திய விமானப்படையும் கோரிக்கை விடுத்திருந்தது. 

இந்நிலையில் மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது தொடர்பாக, பிரதமர் மோடியை விமர்சனம் செய்து சமூகவலைதளத்தில் பதிவிட்டதாக நாம் தமிழர் கட்சி பிரமுகர் பாலசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story