ஹெலிகாப்டர் விபத்து குறித்து பாகிஸ்தானிய டுவிட்டர் கணக்குகளில் அவதூறு தகவல்


ஹெலிகாப்டர் விபத்து குறித்து பாகிஸ்தானிய டுவிட்டர் கணக்குகளில் அவதூறு தகவல்
x
தினத்தந்தி 13 Dec 2021 12:22 AM IST (Updated: 13 Dec 2021 12:22 AM IST)
t-max-icont-min-icon

ஹெலிகாப்டர் விபத்து குறித்து பாகிஸ்தானிய டுவிட்டர் கணக்குகளில் அவதூறு தகவல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு.

சென்னை,

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் இறந்தது தொடர்பாக பாகிஸ்தான் டுவிட்டர் கணக்குகளில் அவதூறு தகவல் வெளியாகி உள்ளதாகவும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடப்பதாகவும், சி.பி.சி.ஐ.டி.சைபர் கிரைம் போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அந்த தகவல் விவரம் வருமாறு:-

அவதூறு தகவல்

ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் பயணித்தவர்களின் இறப்பு குறித்து, வேர்ல்டு கான்பிளிக்ஸ் மானிட்டரிங் சென்டர், பாகிஸ்தான் ஸ்ட்ரட்டெஜிக் பாரம் போன்ற டுவிட்டர் கணக்குகளில், தவறான மற்றும் அவதூறான செய்திகளை பரப்பி, பயங்கரவாதத்தை ஊக்குவிக்க வழிவகை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி.சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் விபத்து

ஹெலிகாப்டர் விபத்து குறித்து வதந்திகளை பரப்பும் வகையில் தகவல்களை வெளியிட வேண்டாம், என்று இந்திய விமானப்படை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதை மீறி தவறான கருத்துக்கள் பரப்பியதாக தமிழகத்தில் யூடியூபர் மாரிதாஸ் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story