மல்லிகை கிலோ ரூ2500க்கு விற்பனை
வரத்து குறைவால் பூக்கள் விலை பல மடங்கு உயர்ந்தது. மல்லிகை பூ ஒரு கிலோ ரூ2500க்கு விற்பனையானது
வரத்து குறைவால் பூக்கள் விலை பல மடங்கு உயர்ந்தது. மல்லிகை பூ ஒரு கிலோ ரூ2500க்கு விற்பனையானது.
முகூர்த்தநாள்
புதுவை குபேர் பஜார் பெரிய மார்க்கெட்டிற்கு தமிழக பகுதியான வானூர், கிளியனூர், மரக்காணம் மற்றும் புதுவை கிராமப்புற பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. பண்டிகை காலங்களில் விலை அதிகமாகவும், மற்ற நேரங்களில் குறைவாகவும் இருக்கும்.
புதுவை மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக பூக்களின் விலை உயர்ந்து வருகிறது. இந்த வாரம் கார்த்திகை கடைசி வாரம் என்பதால் முகூர்த்தங்கள் அதிக அளவில் உள்ளன. திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் இன்று (திங்கட்கிழமை) நடக்கின்றன. சுப நிகழ்ச்சிகளில் முக்கிய அம்சமாக இருப்பதால், மல்லிகைப்பூவுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது.
ரூ.2,500-க்கு விற்பனை
குறிப்பாக கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.ஆயிரத்திற்கு விற்பனையான மல்லிகை நேற்று ரூ.2,500-க்கும், ரூ.800-க்கு விற்பனையான அரும்பு நேற்று ரூ.2 ஆயிரத்திற்கும் விற்பனையானது. புதுவை மார்க்கெட்டில் விற்பனையான மற்ற பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:- கனகாம்பரம்- ரூ.1,800, அரளி -ரூ.500, சாமந்தி - ரூ.240, கோழி கொண்டை பூ - ரூ.120, ரோசாப்பூ - ரூ.280, மஞ்சள் கேந்தி -ரூ.100, சிவப்பு கேந்தி - ரூ.120, மரிக்கொழுந்து - ரூ.150-க்கு விற்பனையானது.
5 கிலோ மட்டுமே வரத்து...
பூக்கள் விலை உயர்வு குறித்து பூ வியாபாரி கூறியதாவது:-
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை மற்றும் பனிப்பொழிவால் பூச்செடிகள் சேதமாகிவிட்டது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக குறைவான பூக்களே வரத்து வந்தது. நேற்று புதுவைக்கு மொத்தம் 5 கிலோ அளவுக்கே மல்லிகை பூ வந்துள்ளது. வரத்து குறைந்துள்ளதால் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது என்றார்
Related Tags :
Next Story