வாக்காளர் பட்டியல் வெளியீடு: இந்தியில் பெயர் இடம் பெற்றதால் சர்ச்சை
கோவை மாநகராட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில், வாக்காளர் ஒருவரது பெயர் இந்தியில் இடம் பெற்று இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.
கோவை,
கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதையொட்டி கடந்த 9-ந்தேதி புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை கோவை மாநகராட்சி ஆணையாளர் வெளியிட்டார்.
இந்தநிலையில் கோவை மாநகராட்சி 69-வார்டுக்கு உட்பட்ட பூத் எண் 842, வரிசை எண் 633-ல் சாய்பாபா காலனி, பாரதி பார்க் 8-வது கிராஸ் பகுதியில் வசிக்கும் வடமாநிலத்தை சேர்ந்த மனோஜ்குமார் மற்றும் அவரது தந்தையான சூரஜ் பெயர்கள் இந்தியில் இடம்பெற்றுள்ளன.
வாக்காளர் பட்டியலில் இந்தியில் பெயர் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாக்காளர் பட்டியல் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டதால் இதுகுறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது:-
தமிழில் மாற்றிக்கொள்ளலாம்
ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் வாக்காளர் மனோஜ்குமார் மற்றும் அவரது தந்தை சூரஜ் ஆகியோரின் பெயர்கள் இந்தியில் இடம் பெற்று இருந்துள்ளது. அதனால் தற்போது கோவை மாநகராட்சி வெளியிட்ட உள்ளாட்சி தேர்தல் பட்டியலிலும் மாற்றம் இல்லாமல் வந்துவிட்டது. எனவே மனோஜ்குமார் விருப்பப்பட்டால் 8-வது படிவம் மூலம் விண்ணப்பித்து, தனது பெயரை தமிழில் மாற்றிக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story