வேலூர்: பேரணாம்பட்டு அருகே 2-வது முறையாக நில அதிர்வு - பொதுமக்கள் அச்சம்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே 2-வது முறையாக நில அதிர்வு ஏற்ப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
பேரணாம்பட்டு,
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள கமலாபுரம், சிந்தக்கணவாய், கவராப்பேட்டை, டி.டி.மோட்டூர், பெரிய பள்ளம் ஆகிய 5 கிராமங்களில் கடந்த 3-ம் தேதி நில அதிர்வு ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் தெருவில் தஞ்சமடைந்தனர். தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே நில அதிர்வு குறித்து ஆய்வு நடத்தி நிரந்தர தீர்வுகாண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே 2-வது முறையாக இன்று மீண்டும் நில அதிர்வு ஏற்ப்பட்டுள்ளது. பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மேலும் இந்த நில அதிர்வு குறித்து தகவலறிந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story