ஸ்ரீரங்கம் கோவிலில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் சாமி தரிசனம்


ஸ்ரீரங்கம் கோவிலில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 13 Dec 2021 9:08 PM GMT (Updated: 2021-12-14T02:38:50+05:30)

ஸ்ரீரங்கம் கோவிலில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் சாமி தரிசனம் - இன்று மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார்.

திருச்சி,

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், தொழில்துறை மந்திரி கே.டி.ராமராவ் மற்றும் குடும்பத்தினர் தனி விமானத்தில் நேற்று பிற்பகல் திருச்சி வந்தனர். விமான நிலையத்தில், சந்திரசேகர ராவை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் சந்திரசேகர ராவ் கார் மூலம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று ரெங்கநாதரை தரிசனம் செய்தார். அர்ச்சுன மண்டபத்தில் உள்ள உற்சவர் மற்றும் தாயார் சன்னதிக்கு சென்றும் சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்ததும் சந்திரசேகர ராவ் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் பராமரிப்பு நன்றாக உள்ளது. தமிழக அரசுக்கு எனது பாராட்டுகள். ஸ்ரீரங்கம் கோவிலுக்கு 2-வது முறையாக வந்துள்ளேன். இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு முதல்-முறையாக தமிழ்நாடு வந்துள்ளேன். நாளை (அதாவது இன்று) மாலை சென்னையில் தமிழக முதல்-அமைச்சரை சந்திக்க உள்ளேன்’’ என்றார். அதைத்தொடர்ந்து அவர் திருச்சி விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.

Next Story