காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அன்றாட பூஜை நடத்தக்கோரி வழக்கு


காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அன்றாட பூஜை நடத்தக்கோரி வழக்கு
x
தினத்தந்தி 13 Dec 2021 11:21 PM GMT (Updated: 2021-12-14T04:51:52+05:30)

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அன்றாட பூஜை நடத்தக்கோரி வழக்கு அறநிலையத்துறை பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், ஆனந்த தேசிகன் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், ‘‘கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மூடப்பட்ட கோவில்கள் அனைத்தையும் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மட்டும் வழக்கமான பூஜை நடைமுறைகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த கோவிலில் துளசி தீர்த்தம், திருமஞ்சனம், அர்ச்சனை, பிரசாதம், வேத பாராயணம், சடாரி போன்ற வழக்கமான அன்றாட நடைமுறைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பிற கோவில்களில் இந்த வழிபாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மார்கழி மாதம் தொடங்கவுள்ளதால் காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள வழக்கமான நடைமுறைகளைத் தொடர கோவில் நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.துரைசாமி, ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர், இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை வருகிற 22-ந்தேதிக்குதள்ளிவைத்தனர்.

Next Story