தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 649 பேருக்கு தொற்று
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 649 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 649 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 27,36,695 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 26,92,451 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 695 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று 9 பேர் உயிரிழந்தனர் (அரசு மருத்துவமனை - 6, தனியார் மருத்துவமனை - 3). இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 36,633 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இன்று மேலும் 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 5,59,705 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் இன்று மேலும் 107 பேருக்கும், ஈரோட்டில் 51 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 5,57,00,000 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,03,889 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 7,611 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story