10ம் வகுப்பு துணை தேர்வு மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு
10ம் வகுப்புக்கான துணை தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.
சென்னை,
அரசு தேர்வு துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு தேர்வு துறை சார்பில் கடந்த செப்டம்பரில் நடத்தப்பட்ட 10ம் வகுப்பு துணை தேர்வின் முடிவுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.
இதில் மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று பிற்பகல் 2:00 மணிக்கு வெளியிடப்படுகிறது.
இந்த பட்டியலில் இடம்பெறுவோர், தங்களின் தேர்வு எண், பிறந்த தேதி ஆகிய விபரங்களை பதிவு செய்து, தங்களின் திருத்தப்பட்ட மதிப்பெண் அடங்கிய, தற்காலிக சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம். இந்த பட்டியலில் இடம் பெறாதவர்களுக்கு, மதிப்பெண்ணில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story