சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைவு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்துள்ளது.
சென்னை,
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு படிப்படியாக இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் நிலையில், பொருளாதார சூழலின் அடிப்படையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.184 குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 குறைந்து ரூ.36,152-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.23 குறைந்து, ரூ.4,519-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதுபோன்று சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.64.60க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.64,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Related Tags :
Next Story