பொட்டாஷ் விலையை குறைக்க வேண்டும் - விஜயகாந்த்
பொட்டாஷ் விலை உயர்வால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. விலையை குறைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் பயிர்களுக்கு உரமாகப் பயன்படும் பொட்டாஷ் உள்ளிட்ட உள்ளிட்ட விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சில இடங்களில் பணம் கொடுத்தாலும் பொட்டாஷ் உரம் கிடைக்காததால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
எனவே, பொட்டாஷ் உரத்தின் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
'உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி' என்பது போல ஒரு பக்கம் மழை வெள்ள பாதிப்பு, மறுபக்கம் உரம் விலை உயர்வால் விவசாயிகள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
எனவே பொட்டாஷ் உரம் விலை உயர்வை குறைக்க, மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
"உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி" என்பது போல ஒரு பக்கம் மழை வெள்ள பாதிப்பு, மறுபக்கம் உரம் விலை உயர்வால் விவசாயிகள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
— Vijayakant (@iVijayakant) December 15, 2021
எனவே பொட்டாஷ் உரம் விலை உயர்வை குறைக்க, மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். pic.twitter.com/6frvB8K0oX
Related Tags :
Next Story