வருண் சிங் மறைவு: வீரத்திற்காகவும், தியாகத்திற்காகவும் நிலைத்திருப்பார் - கமல்ஹாசன்


வருண் சிங் மறைவு: வீரத்திற்காகவும், தியாகத்திற்காகவும்  நிலைத்திருப்பார் - கமல்ஹாசன்
x
தினத்தந்தி 15 Dec 2021 4:54 PM IST (Updated: 15 Dec 2021 5:12 PM IST)
t-max-icont-min-icon

குரூப் கேப்டன் வருண் சிங் மறைவிற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். இந்த தகவலை விமானப்படை அதிகாரப்பூர்வாக அறிவித்துள்ளது. இதன் மூலம் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் அதில் பயணம் செய்த அனைவரும் (14 பேரும்) உயிரிழந்த சோகமான நிகழ்வு அரங்கேறியுள்ளது.

இந்தநிலையில், கேப்டன் வருண் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மக்கள் நிதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில்,

குரூப் கேப்டன் வருண்சிங் மறைந்து விட்டார். வீரத்திற்காகவும், தியாகத்திற்காகவும் மக்களின் மனங்களில் நிலைத்திருப்பார் என் அஞ்சலிகள் என பதிவிட்டுள்ளார்.

Next Story