எம்ஜிஆர் உருவாக்கிய சட்ட விதிகள் அழிந்து விடாமல் காப்பதே நமது முதல் கடமை - சசிகலா


எம்ஜிஆர் உருவாக்கிய சட்ட விதிகள் அழிந்து விடாமல் காப்பதே நமது முதல் கடமை   -  சசிகலா
x
தினத்தந்தி 15 Dec 2021 5:18 PM IST (Updated: 15 Dec 2021 5:18 PM IST)
t-max-icont-min-icon

எம்ஜிஆர் உருவாக்கிய சட்ட விதிகள்...அழிந்து விடாமல் வலுசேர்க்க வேண்டும் என தொண்டர்களுக்கு சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

அனைத்து அடிப்படை தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவரால்தான் கட்சியை சிறப்பாக வழிநடத்த முடியும் என மறைந்த முதல்-அமைச்சர் எம்ஜிஆர் கருதியதாகவும், பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனும் தனித்துவமான சட்ட விதியை எம்ஜிஆர் உருவாக்கியதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்பொழுது அதனை மாற்றும் வகையில் ஒரு சிலர் செயல்படுவது தனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டும் எல்லா பலன்களை அடைவதையும், தனிப்பட்ட தேவைகளுக்காக செயல்படுவதையும் தொண்டர்கள் பார்த்து கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள் எனவும், எம்ஜிஆர் உருவாக்கிய சட்டவிதிகளை அழிந்து விடாமல் காப்பதே நமது முதல் கடமை எனவும், அதற்காக தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story