காங்கேயம் அருகே வயதான தம்பதியினர் கொடூர கொலை..!


காங்கேயம் அருகே வயதான தம்பதியினர் கொடூர கொலை..!
x
தினத்தந்தி 15 Dec 2021 6:08 PM IST (Updated: 15 Dec 2021 6:08 PM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதி கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

காங்கேயம்

திருப்பூர் மாவட்டம்,  காங்கேயம் அருகே ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்த தோட்டத்து வீட்டில் 72 வயதான பழனிச்சாமி என்பவர், மனைவி வள்ளியம்மாளுடன்(68)  தனியாக வசித்து வந்தார். 

இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் இருவரையும் கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு, வள்ளியம்மாள் அணிந்திருந்த ஏழரை சவரன் தங்க தாலி மற்றும் வீட்டில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்.பி. சசாங் சாய் தலைமையிலான போலீசார் தடயங்களை கைப்பற்றி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story