பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம்... மாணவர்களை எச்சரித்து அனுப்பிய உதவி ஆய்வாளர்
நந்தனம் பகுதியில் அரசு கல்லூரி மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் பேருந்தின் படிக்கட்டில் பயணித்தபடி கூச்சலிட்டவாறு சென்றனர்.
சென்னை ,
அரசு பஸ்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தால் ஓட்டுநர், நடத்துநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை ஏற்கனவே தெரிவித்துள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பான முறையில் பேருந்தில் ஏறி இறங்குவதை உறுதி செய்த பின்பே பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் பஸ்சில் போதிய இடவசதி ஏற்படுத்தி கொடுத்து படிக்கட்டில் நிற்காதாவாறு ஏற்பாடு செய்யவும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம்...மாணவர்களை எச்சரித்து அனுப்பிய உதவி ஆய்வாளர்#Chennai#CollegeStudents#FootBoardpic.twitter.com/UKxkX1XNnA
— Thanthi TV (@ThanthiTV) December 15, 2021
இந்த நிலையில் இன்று நந்தனம் பகுதியில் அரசு கல்லூரி மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் பேருந்தின் படிக்கட்டில் பயணித்தபடி கூச்சலிட்டவாறு சென்றனர். அப்போது அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த சைதாப்பேட்டை உதவி ஆய்வாளர் சுதர்சனன் , பேருந்தை மடக்கி மாணவர்களை எச்சரித்து அனுப்பினார்.
Related Tags :
Next Story