பட்டப்பகலில் பயங்கரம்: அரசு பள்ளி மைதானத்தில் மாணவி எரித்துக்கொலை?

திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலைப்பகுதியான பாச்சலூரை சேர்ந்தவர் சத்யராஜ். கூலித்தொழிலாளி. இவருக்கு பிரியதர்ஷினி (வயது 10), பிரித்திகா (9) என்ற மகள்களும், நவீன்குமார் (6) என்ற மகனும் உள்ளனர். 3 பேரும் பாச்சலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் படிக்கின்றனர். பிரித்திகா 5-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்தநிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் 3 பேரும் பள்ளிக்கு சென்றனர். காலை 11 மணியளவில் பிரித்திகா வகுப்பறையைவிட்டு வெளியே சென்றதாக தெரிகிறது. அதன்பின்னர் வகுப்பறைக்கு வரவில்லை. இந்தநிலையில் மாணவி பிரித்திகா பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் தீயில் கருகிய நிலையில் பிணமாக கிடந்தாள். தகவல் அறிந்து வந்த மாணவியின் தந்தை சத்யராஜ் மகளின் உடலை பார்த்து கதறி அழுதார். மாணவியின் உடலை கைப்பற்றிய போலீசார் அவளை யாரும் எரித்துக் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story