தமிழ்நாட்டின் பெண்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளம் - கவர்னர் ஆர்.என்.ரவி


தமிழ்நாட்டின் பெண்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளம் -  கவர்னர் ஆர்.என்.ரவி
x
தினத்தந்தி 16 Dec 2021 4:20 PM IST (Updated: 16 Dec 2021 4:20 PM IST)
t-max-icont-min-icon

பெண்கள் முன்னேற்றத்தில் இந்தியாவிற்கே முன் மாதிரியாக தமிழகம் திகழ்வதாக கவர்னர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை,

மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகத்தில் அன்னை தெரசா பல்கலைகழகத்தின் 29 வது பட்டமளிப்பு விழாவில் கவர்னர்  ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, திருப்பதி பத்மாவதி பல்கலைகழக துணை வேந்தர் ஜமுனா துவ்வுரு ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி,

இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் பெண்கள் வளர்ச்சிக்கு பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. சமூக நீதியின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட பல திட்டங்களால் தமிழகத்தில் ஆண்களை விட அதிகமாக பெண்கள் கல்வி கற்று வருகின்றனர்.

உலகின் அனைத்து துறைகளிலும் தமிழ் பெண்கள் சாதித்து வெற்றி பெற வேண்டும். சர்வதேச அளவில் இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது தமிழ்நாட்டை சேர்ந்த பெண்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

பெண்களின் பொருளாதார பாதுகாப்பையும், சுகாதார பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும் நம் முன் உள்ளது. படித்து பட்டம் பெற்று விட்டு பல பெண்கள் மீண்டும் வீட்டிற்குள் முடங்கி குடும்ப தலைவியாகி விடுகிறார்கள்; குடும்ப தலைவியாக இருப்பதும் பெரிய பொறுப்பு தான். இருந்தாலும், அவர்களுடைய பொருளாதார பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

Next Story