கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
முதல்-அமைச்சரின் அரசாணையை ரத்து செய்யக்கோரி மதகடிப்பட்டில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருபுவனை
முதல்-அமைச்சரின் அரசாணையை ரத்து செய்யக்கோரி மதகடிப்பட்டில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பொது பகுதியாக அறிவிப்பு
புதுவை மாநிலம் அரியூர் மற்றும் லிங்கா ரெட்டிபாளையம் சர்க்கரை ஆலைகள் இயங்காததால் இப்பகுதியில் உள்ள கரும்புகளை அரசு அனுமதி பெற்று கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்து அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் அரியூர், லிங்காரெட்டிப்பாளையம் சர்க்கரை ஆலை பகுதியை பொது பகுதியாக முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்து, விரும்பிய ஆலைகளுக்கு விவசாயிகள் கரும்புகளை அனுப்பலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பொது பகுதியாக அறிவித்துள்ளதால் விவசாயிகளால் வங்கி கடன் பெற முடியாத சூழ்நிலை உருவாகும், ஆலையில் இருந்து பெறப்படும் கரும்பு உற்பத்தி மானியம் கிடைக்காமல் போகும் நிலை உள்ளது. எனவே முதல்-அமைச்சர் தனது உத்தரவை ரத்து செய்யக்கோரி புதுச்சேரி கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மதகடிப்பட்டில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் ராமதாஸ், செயலாளர் விஸ்வலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினர். பொதுபகுதியாக அறிவித்த அரசாணையை ரத்து செய்யவேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இல்லை என்றால் அனைத்து தரப்பு விவசாயிகளையும் ஒன்றிணைத்து மாநிலம் தழுவிய அளவில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்று கரும்பு விவசாயிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story