வாடகைக்கு வீடு பார்ப்பதுபோல் நடித்து ஆசிரியையிடம் கத்தி முனையில் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது


வாடகைக்கு வீடு பார்ப்பதுபோல் நடித்து  ஆசிரியையிடம் கத்தி முனையில் நகை பறித்த  2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 16 Dec 2021 11:14 PM IST (Updated: 16 Dec 2021 11:14 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் வாடகைக்கு வீடு பார்ப்பதுபோல் நடித்து ஆசிரியையிடம் கத்தி முனையில் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி
புதுச்சேரியில்  வாடகைக்கு வீடு பார்ப்பதுபோல் நடித்து ஆசிரியையிடம் கத்தி முனையில் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
13 பவுன் நகை பறிப்பு
ரெட்டியார்பாளையம் செல்லபாப்பு நகர் 4-வது சாலையை சேர்ந்தவர்  டேனியல் கிருஷ்ணன். இவரது மனைவி வின்னி பிரிசில்லா (வயது 50), தனியார் பள்ளி ஆசிரியை. இவரது வீட்டுக்கு கடந்த மாதம் 16-ந் தேதி வாடகைக்கு வீடு பார்ப்பது போல 2 மர்ம ஆசாமிகள் வந்தனர். அவர்களுக்கு வின்னி பிரிசில்லா வீட்டை காண்பித்தார். அப்போது திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரிசில்லாவின் கழுத்தில் வைத்து, அவர் அணிந்திருந்த 13 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

2 வாலிபர்கள் கைது

இந்த நிலையில் நேற்று  உழவர்கரை சீனுவாசா குடியிருப்புக்கு எதிரே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், உழவர்கரையைச் சேர்ந்த ஜான் (28), மூலக்குளம் பசும்பொன் நகரைச் சேர்ந்த கவுதம் (29) என்பதும், வின்னி பிரிசில்லாவை மிரட்டி நகை பறித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ஜான், கவுதம் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13 பவுன் நகைகள் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story