தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருகிறது பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருகிறது முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு.
தஞ்சாவூர்,
தஞ்சையில் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. அரசு 100 நாட்களில் 200 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம் என விளம்பரம் செய்துள்ளது. ஆனால் எதுவும் செய்யவில்லை. தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் போதைப்பொருள் விற்பனை அதிகமாகியுள்ளது. பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் போதைக்கு அடிமையாகக்கூடிய சூழல் உள்ளது.
எனவே உடனடியாக போதைப்பொருள் விற்பனையைத் தடை செய்து தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும். ஒரு வழக்கு பதிவு செய்யப்படும்போது, குற்றம் சாட்டப்படுபவர்கள் மீது யோசித்து நடவடிக்கை எடுப்பது போலீசாரின் கடமை. இல்லாவிட்டால் நடவடிக்கையை விட்டுவிட வேண்டும்.
இதைச் செய்யாமல் வாட்டுகிற விதமாக யூடியூபர் மாரிதாசை பழிவாங்கும் வகையில் செயல்படுகிற அரசு மக்களுக்கானதாகவோ, கருத்து சுதந்திரத்துக்கானதாகவோ இருக்க முடியாது
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story