நீர்நிலைகள் மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டால் அதிகாரிகள் பணியிடை நீக்கம் ஐகோர்ட்டு எச்சரிக்கை
நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பின்னர், மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு எச்சரித்துள்ளது.
சென்னை,
தமிழகம் முழுவதும் பல்வேறு நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி தொடரப்பட்ட வழக்குகளை, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கிற்கு தலைமைச்செயலாளர் இறையன்பு அறிக்கை தாக்கல் செய்தார். அதில், ‘‘தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் 47 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவு சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. 4,862 அரசு கட்டிடங்கள், 8,796 வணிக கட்டிடங்கள், 3.20 லட்சம் குடியிருப்பு கட்டிடங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. எனவே, நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், புதிய ஆக்கிரமிப்புகளை தடுக்கவும் 1905-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது’’ என்று கூறியிருந்தார்.
பணியிடை நீக்கம்
இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமைச் செயலாளரின் அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், ‘‘தலைமைச்செயலாளர் அறிக்கையின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை குறிப்பிட்ட கால கட்டத்துக்குள் அகற்ற வேண்டும்.
இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட நேரிடும்’’ என்று எச்சரிக்கை செய்தனர்.
பின்னர், ‘‘சர்வே எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அதிகாரிகளுக்கு தெரியும் என்பதால் நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அதிகாரிகளின் கடமை ஆகும். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பின்னரும், நீர்நிலைகள் மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்வது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்’’ என்றும் நீதிபதிகள் கூறினர்.
மாவட்ட குழு
இதையடுத்து, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், ‘‘நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தடுக்கவும், அவற்றை அகற்றவும் மாவட்ட அளவில் குழு அமைக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்தனர். ஆனால் இந்த யோசனையை நீதிபதிகள் ஏற்கவில்லை. இதுபோல குழு அமைப்பதால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை’’ என்றும் கூறினார்.
பின்னர், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் இந்த வழக்குகள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

Related Tags :
Next Story