ஒமைக்ரான் வைரஸ் அச்சம் : உள்நாட்டு விமான பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு
உள்நாட்டில் பயணம் செய்யும் விமான பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புது வகை கொரோனா தொற்று ஒமைக்ரான் தற்போது உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.ஓமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.
வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு மட்டுமே விமான நிலையத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உள்நாட்டில் பயணம் செய்யும் விமான பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது .இ-பதிவு கட்டாயம், தெர்மல் ஸ்கேன் பரிசோதனை ,72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது .
பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருகிற விமான பயணிகளுக்கு இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது கேரளாவிலிருந்து தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story