போலீசுக்கு பெண் அனுப்பிய பதிவு தபால்


போலீசுக்கு பெண் அனுப்பிய பதிவு தபால்
x
தினத்தந்தி 18 Dec 2021 12:15 AM IST (Updated: 18 Dec 2021 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருக்கனூரில் மனைவி மாயமான நிலையில் கணவர் புகார் அளித்த நிலையில் போலீசாருக்கு அந்த பெண் பதிவு தபாலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருக்கனூரில் மனைவி மாயமான நிலையில் கணவர் புகார் அளித்த நிலையில் போலீசாருக்கு அந்த பெண் பதிவு தபாலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குழந்தைகளுடன் மாயம்
திருக்கனூர் அருகே உள்ள சோம்பட்டு அய்யனார் கோவில் வீதியை சேர்ந்தவர் முத்து பாண்டியன் (வயது 28). கொத்தனார். இவரது மனைவி அஸ்வினி (23). திருபுவனையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 
இந்தநிலையில் கடந்த 10-ந்தேதி அஸ்வினி தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் இருந்து மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து முத்துப்பாண்டியன் அளித்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 குழந்தைகளுடன் மாயமான அஸ்வினியை தேடி வந்தனர்.
போலீசாருக்கு கடிதம்
இதற்கிடையே பதிவு தபால் மூலமாக அஸ்வினி திருக்கனூர் போலீஸ் நிலையத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
என்னை யாரும் கடத்தவில்லை. எனது கணவர் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வந்து அடித்து கொடுமைப்படுத்துகிறார். இதனை அவரது உறவினர்களிடம் தெரிவித்தாலும் கண்டு கொள்ளவில்லை. எனது குழந்தைகளின் நலன் கருதி நான் சொந்தமாக தொழில் செய்து என் பிள்ளைகளை பார்த்துக்கொள்கிறேன். என்னை யாரும் தேட வேண்டாம் என் சொந்த விருப்பத்தில் வீட்டை விட்டு வெளியே செல்கிறேன். இவ்வாறு அதில் குறிப் பிடப்பட்டி ருந்்தது.
குழந்தைகளுடன் மனைவி காணவில்லை என கணவர் புகார் அளித்துள்ள நிலையில் மனைவி போலீசாருக்கு கடிதம் அனுப்பி உள்ளது திருக்கனூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story