தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நீர்நிலைகள் நிரம்பியதோடு வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.
இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய நில நடுக்கோட்டுக்கு அருகே இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது.
தமிழ்நாடு கடல் பகுதியில் இருந்து எதிர் திசையில் இந்த தாழ்வு மண்டலம் இருப்பதால் தமிழ்நாட்டுக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும், தென்கிழக்கு வங்ககடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story