தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் கடிதம்


தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் கடிதம்
x
தினத்தந்தி 18 Dec 2021 1:17 PM IST (Updated: 18 Dec 2021 1:17 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க அனுமதிக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது

சென்னை 

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ், அதிவேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவையும்  விட்டு வைக்கவில்லை.இந்தியாவில்  ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் 111 ஆக  உயர்ந்துள்ளது. 

மேலும் தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் ,தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க அனுமதிக்கோரி ,மத்திய  அரசுக்கு  கடிதம் அனுப்பப்பட்டுள்ளது 

பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் எழுதியிருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதாவது ;

தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் ,28  பேருக்கு எஸ் வகை மரபணு மாற்றம் இருப்பது தெரிய வந்துள்ளது .இதில் 4 பேர் மட்டும்  ஆபத்து அதிகம் இருக்கும் நாடுகளில் இருந்து வந்தவர்கள்  24 பேர் மற்ற நாடுகளில் இருந்தும் வந்தவர்கள். 

இதனால் இனி அனைத்து நாடுகளில் இருந்து வருபவர்களுக்கும் கொரோன பரிசோதனை கட்டாயமாக்கப்பட வேண்டும் . ,அப்படி செய்தால் தான் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த முடியும் .அனைத்து வெளிநாட்டு பயணிகள், வீட்டில் அல்லது மையங்களில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் ,8 வது நாளில் கொரோன பரிசோதனை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் வலியுறுத்தியுள்ளார் 


Next Story