சிதம்பரம்,சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 19ஆம் தேதி ஞாயிறன்று தேரோட்டமும், திங்கட்கிழமை ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பாக நடைபெற உள்ளது.இதனிடையே சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பாரதிய ஜனதாகட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா வருகை தந்தார். அவரை கோவில் பொதுதீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து கோவிலுக்குள் அழைத்து சென்றனர். சாமி தரிசனத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, சிதம்பரத்தில் 19 தேதி நடராஜர் கோயில் தேரோட்டமும், 20ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறவுள்ளது. தீயசக்திகள் இந்த கோவிலை எப்படியாவது அபகரிக்க பல தடவை முயற்சி செய்துள்ளது. அரசு எடுக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக கூறியுள்ளது. காரணம் அரசியல் சாசன சட்டப்பிரிவு 26-ன் படி சம்பிரதாய பிரிவுகளை பாதுகாக்க தனி சட்டப்பிரிவு உள்ளது.சிதம்பரத்தில் சட்டப்படி மத விழாக்களுக்கு அரசிடம் அனுமதி கேட்க தேவையில்லை. கொரொரோனா உச்சத்தில் இருந்த போதே தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டம் நடத்துவதில் என்ன பிரச்சினை உள்ளது. முதல்-அமைச்சர் நிகழ்ச்சிக்கு மக்கள் கூடலாம், இங்கு மக்கள் கூடினால் என்ன தவறு உள்ளது. டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் வருகிறது. சர்ச்சுகளில் கிறிஸ்துமஸ் விழாவிற்கு தடை விதிக்க முடியுமா? சிதம்பரத்தில் தலையிட காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினார்.