நடத்துநரை தாக்கிய பள்ளி மாணவர்கள் - பஸ்சை நடுவழியில் நிறுத்தி போராட்டம்


நடத்துநரை தாக்கிய பள்ளி மாணவர்கள் - பஸ்சை நடுவழியில் நிறுத்தி போராட்டம்
x
தினத்தந்தி 18 Dec 2021 7:15 PM IST (Updated: 18 Dec 2021 7:15 PM IST)
t-max-icont-min-icon

நடத்துநரை மாணவர்கள் தாக்கியதால் புகார் எதிரொலியால் அரசு பஸ்களை சாலையில் நிறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

சென்னை,

சென்னையில் 29 ஏ பஸ் ஒட்டுநரை தாக்கிய மாணவர்களை கைது செய்யக்கோரி ஓட்டேரியில் அரசு பஸ்களை சாலையில் நிறுத்தி ஓட்டுநர்கள், நடத்துநர்கள் போராட்டம் நடத்தினர். பஸ் படிகட்டில் தொங்கியபடி பயணித்ததை கண்டித்ததால் நடத்துநரை மாணவர்கள் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

மாநகர பஸ் கூரையின் மீது மாணவர்கள் ஏறியதை தட்டி கேட்டதால் மாணவர்கள் ஆத்திரம் அடைந்து நடத்துனரை தாக்கியதாக கூறப்படுகிறது. 

சம்பவம் இடத்திற்கு விரைந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சில நேரம் பரபரப்பு நிலவியது.
மாநகர பஸ் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story