தமிழகத்தில் மேலும் 613 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் 613 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் 1,00,175 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 621 ஆக உள்ளது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 621 இல் இருந்து 613 ஆக குறைந்துள்ளது.
சென்னையில் மேலும் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவால் மேலும் 9 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,676 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 6 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 3 பேரும் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 7,346 ஆக குறைந்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 665 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 26,95,174 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
கோவையில் 102 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 101 ஆக குறைந்துள்ளது. ஈரோட்டில் 48 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 46 ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் இன்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 19.07 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story