வேலைவாய்ப்பு முகாமில் 1,260 பேருக்கு பணி நியமன ஆணை
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
இந்த முகாமினை, போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்து, தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
வேலைவாய்ப்பு முகாமில் 142 நிறுவனங்கள் பங்கேற்றன. வேலைவாய்ப்புக்காக 5 ஆயிரத்து 104 இளைஞர்கள் பங்கேற்றனர். இவர்களில் தேர்ச்சி பெற்ற 1,260 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. விழாவில், மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத், மாவட்ட வருவாய் அதிகாரி ஆ.ம.காமாட்சி கணேசன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மதுரை மண்டல இணை இயக்குனர் வி.சுப்பிரமணியன் உள்பட அரசு அதிகாரிகள், இளைஞர்கள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story