ராமேசுவரம் மீனவர்கள் 42 பேர் இலங்கை கடற்படையால் சிறை பிடிப்பு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 19 Dec 2021 11:26 AM IST (Updated: 19 Dec 2021 11:26 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் கடந்த வாரம் இலங்கை கடற்படை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில் தற்போது அவர்கள் 42 பேரை சிறைபிடித்து சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராமேசுவரம்,

நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 42 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்றது. மேலும் அவர்களது 6 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். இதனால் சக மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இன்று காலை ராமேசுவரம் கரை திரும்பியதும் இதுபற்றி தெரிவித்தனர்.

இதனால் மீனவ கிராமங்களில் பதட்டம் உருவாகி உள்ளது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை யாழ்ப்பாணம் துறை முகத்திற்கு இலங்கை கடற்படையினர் கொண்டு சென்றனர். பின்னர் அங்கு படகுகளை நிறுத்தி விட்டு மீனவர்களை மட்டும் தலைமன்னார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story