தமிழக மீனவர்களை விடுவிக்க கோரிக்கை - கனிமொழி எம்.பி.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய மந்திரிக்கு கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், இன்று தமிழகத்தை சேர்ந்த மேலும் 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து 2 படகுகளும் பறிமுதல் செய்துள்ளது. இதுவரை மொத்தம் 55 தமிழக மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை 12 விசைப்படகுகளை பறிமுதல் செய்துள்ளது.
தமிழக மீனவர்வகளை இலங்கை கடற்படை கைதை தொடர்ந்து, தமிழக அரசியல் தலைவர்கள் பலர் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. இலங்கை கடற்படையை கண்டித்தும், கைது செய்த மீனவர்களை விடுவிக்க கோரியும் மீனவர்கள் கிராமங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழக மீனவர்கள் கைது குறித்து திமுக எம்பி கனிமொழி தனது டுவிட்டர் பதிவிட்டுள்ளார். அதில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அவர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளேன்.
மத்திய அரசு உடனடியாக இலங்கை அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு அவர்களின் செயலைக் கண்டித்து, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. @DrSJaishankar அவர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளேன். (1/2)
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) December 19, 2021
Related Tags :
Next Story